Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : உள்ளூர் தமிழ் தொடர் ‘ஸோம்பி காதலி’ ஜனவரி 30 – முதல் ஒளிபரப்புக்...

ஆஸ்ட்ரோ : உள்ளூர் தமிழ் தொடர் ‘ஸோம்பி காதலி’ ஜனவரி 30 – முதல் ஒளிபரப்புக் காணுகிறது

639
0
SHARE
Ad

உள்ளூர் தமிழ் தொடர் ‘ஸோம்பி காதலி’ ஜனவரி 30 ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

ஸோம்பி கருப்பொருளை மையமாகக் கொண்ட முதல் உள்ளூர் தமிழ் கற்பனைக் காதல் தொடர்

கோலாலம்பூர் : ஜனவரி 30, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் ஸோம்பி காதலி எனும் ஸோம்பி (Zombie)  கருப்பொருளை மையமாகக் கொண்ட முதல் உள்ளூர் தமிழ் கற்பனைக் காதல் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம்.

விருது வென்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், சரண் சட் இயக்கிய, ஸோம்பி காதலி அவரது முதல் தமிழ் தொடராகும். இத்தொடரில் ஜெய்ஸ்ரீ விஜயன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி, சாந்தினி கோர், ஹேமாஜி – மேலும் பல திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகப் பிரிவு உதவித் துணைத் தலைவர் (ஆஸ்ட்ரோ விண்மீன்), மகேஸ்வரன் பாலகிருஷ்ணன் கூறுகையில், “உள்ளூர் திரைப்படத் துறையின் படைப்பாற்றலை மேலும் ஆராய்வதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் தமிழ் தொடர்களின் புதிய வகையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் இந்தத் தொடரை இரசிப்பார்கள் என்று நம்புகிறோம் மற்றும் பல உள்ளூர் தயாரிப்புக் குழுக்கள் மற்றும் திறமையாளர்களுடன் இணைந்துப் பணியாற்ற நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஸோம்பி காதலி தொடரின் இயக்குநர், சரண் சட் கூறுகையில், “காதல், நட்பு, மோதல், அதிரடி, நகைச்சுவை மற்றும் எதிர்ப்பாராதத் திருப்பங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியை இந்தக் கதைக் கொண்டுள்ளதால், ஸோம்பி காதலி ஒரு முழுமையானக் குடும்பப் பொழுதுபோக்காக இருக்கும். இந்தத் தொடர் ஆரம்பம் முதலே சினிமாக் கோணத்தில் படமாக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. எனவே, மலேசிய நாடகத் தொடருக்கானப் புதிய அளவிலானப் பார்வை அனுபவத்தை இரசிகர்கள் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன். காட்சிகளுக்காக இரசிகர்களின் உணர்ச்சிகளை உயர்த்த முழுத் தொடருக்கும் 6 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தொடருக்கு இந்தப் பாடல்கள் தூணாக இருக்கும் என்று நம்புகிறேன். உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் புதிய வகைப் படைப்புகளை ஆராய்வதற்கான வாய்ப்பையும் சுதந்திரத்தையும் வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

பாதி ஸோம்பியாக மாறியதால் வாழ்க்கையே தலைகீழாக மாறும் குத்துச்சண்டை வீராங்கனையும் மாடலுமான அனு என்பவரை 22-அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் சித்திரிக்கிறது. சவால்களுக்கு மத்தியில் அனு தனது தொழிலையும் காதல் உறவையும் எவ்வாறு கையாள்கிறார் என்பது கதையின் மையக்கருவாக அமைகிறது.

ஸோம்பி காதலி தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி அலைவரிசை, ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.