Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : மார்ச் 2023 மாத நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : மார்ச் 2023 மாத நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

891
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் மார்ச் 2023 மாதத்தில் இடம் பெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களும் விவரங்களும் – இந்த தகவல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

திங்கள், 13 மார்ச் முதல்

மன்மத புல்லட் ரீலோடட் (புதிய அத்தியாயங்கள் – 3-6)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: தேவகுரு சுப்பையா, செல்லினா ஜெய், இர்பான் சைனி, தாஷா கிருஷ்ணகுமார் & ஜெயஸ்ரீ விஜயன்
மதனும் அம்பும் தோட்டாக்களைச் சுடுவதற்கு முன் புதிய ஆறு இலக்குகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொண்டனர்.

புதன், 15 மார்ச்

மோல்க்கி – ரிஷ்டன் கி அக்னிபரீக்ஷா (Molkki – Rishton Ki
Agnipareeksha) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மாலை 6.30 மணி, திங்கள் – வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஆஷிஷ் கபூர் & விதி யாதவ் ஒரு கலைஞராக வேண்டும் என்றுக் கனவுக் காணும் பூமி, மோல்க்கி என்ற மணப்பெண்களை வாங்கும் பழமையான நடைமுறையின் கீழ் தாக்கூரைத் திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்.

வெள்ளி, 17 மார்ச்

பயணம்@ஐலட் (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: சீலன் மனோகரன்

விளையாட்டு நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஜோடிப் போட்டியாளர்களான, ஓர் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமும் ஒரு சமூக ஊடகப் பிரபலமும் வெற்றியாளராக முடிசூட, பல்வேறுப் பணிகளில் ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர். இந்த வாரப் போட்டியாளர்களான, திறமையான உள்ளூர் கலைஞர், சங்கபாலன், சமூக ஊடகப் பிரபலம், கீர்த்தனா இருவரும் புலாவ் திங்கியில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர்.

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 3)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களது தனித்துவமான சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். ய

இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ (Fernleaf) பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையான, புஷ்பா, அவரது தாயார் இடம்பெறுவார்கள்.

ஞாயிறு, 19 மார்ச்

டபல் எட்டக் (Double Attack) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ராம் சரண், காஜல் அகர்வால், & அமலா பால்
தன்னைப் போன்றத் தோற்றம் கொண்ட ஒரு நேர்மையான கண்காணிப்பாளரால் ஒரு அப்பாவி மென்பொருள் பொறியாளர் சிக்கலில் சிக்குகிறார். அவர்கள் ஒரு தீய அரசியல்வாதிக்கு எதிராக அணிசேர்கின்றனர்.

திங்கள், 20 மார்ச்

மன்மத புல்லட் ரீலோடட் (புதிய அத்தியாயங்கள் – 7-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தேவகுரு சுப்பையா, செல்லினா ஜெய், இர்பான் சைனி, தாஷா கிருஷ்ணகுமார் & ஜெயஸ்ரீ விஜயன்
மதன் மற்றும் அம்பு ஆகியோரின் திட்டமிடல் படி மூன்று ஜோடிகளும் எதிர்பாராத விதமாகச் சந்திக்கின்றனர்.

வெள்ளி, 24 மார்ச்

பயணம்@ஐலட் (புதிய அத்தியாயம் – 6)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: சீலன் மனோகரன்

விளையாட்டு நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஜோடி போட்டியாளர்களான, ஓர் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமும் ஒரு சமூக ஊடகப் பிரபலமும் வெற்றியாளராக முடிசூடப் பல்வேறுப் பணிகளில் ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர். இந்த வாரப் போட்டியாளர்களான, திறமையான உள்ளூர் கலைஞர், திஷாலெனி ஜேக் மற்றும் சமூக ஊடகப் பிரபலம், கீனா சங்கீதா இருவரும் புலாவ் தியோமானில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர்.

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 4)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி – அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம் பெறுவர். தங்களது தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமானச் சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையான, ஷாலினி – அவரது தாயார் இடம்பெறுவார்கள்.

ஞாயிறு, 26 மார்ச்

டேன்சரஸ் கிள்ளாடி 2 (Dangerous Khiladi 2) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், அமலா பால் & கேத்தரின் திரேசா, சஞ்சு கோமளியின் காதல் கதையை ஆகன்ஷா ஒரு டைரியின் வழித் தெரிந்துக் கொள்கிறார். கதை முழுமையடையாததைத் தெரிந்துக் கொண்டு அவள் சஞ்சுவைச் சந்திக்கச் செல்கிறாள். ஆகன்ஷா சஞ்சு மீது காதல் வயப்படும்போது விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.