புதுடெல்லி, ஏப்24 – இன்டர்நெட் மூலம் இளைய தலைமுறையினரிடையே நட்பை ஏற்படுத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ‘பேஸ் புக்’ வலைத்தளம், தற்போது இந்தியாவில் குழந்தைகளை விற்பனை செய்யப் பயன்படும் மின்னணு சந்தையாக மாறிப்போன அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன குழந்தையின் புகைப்படத்துடன் ‘குழந்தை விற்பனைக்கு’ என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் ‘பேஸ் புக்’கில் வலம் வந்தது.
இந்த விளம்பரத்தைப் பார்த்த டெல்லியை சேர்ந்த ஒருவர் ரூ.8 லட்சம் தந்து அந்த குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.
அவரது உறவினர் இர்பான் என்பவர் மூலமாக ‘பேஸ் புக்’கில் விளம்பரம் செய்து டெல்லி ஆசாமிக்கு தனது பேரனை ரூ.8 லட்சத்துக்கு பேரம் பேசி விற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த படுபாதக செயலை செய்யத் துணிந்தது ஏன்? என்ற போலீசாரின் கேள்விக்கு பெரோஸ் கான் அளித்த விளக்கம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் நூரிக்கு இரண்டாம் திருமணம் செய்விக்க பணம் தேவைப்பட்டதால், அவளது புதிய இல்லற வாழ்க்கைக்கு பேரன் தடையாக இருந்து விடக்கூடாது என்று கருதி, அவனை விற்க பெரோஸ் கான் முடிவு செய்துள்ளார்.
பேரனை விற்ற பணத்தை வைத்தே, மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த பெரோஸ் கான், இர்பான், நர்ஸ் சுனிதா, குர்பிரீத் சிங் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், குழந்தையை விலை கொடுத்து வாங்கிய அமீத் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.