டிவிட்டரில் வெள்ளை மாளிகையில் தாக்குதலில், அதிபர் பாரக் ஒபாமாவுக்கு காயம் ஏற்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் சார்பில் வெளியானது. இந்த செய்தி பலரது தரப்பில் இணையத்தில் பரவி மக்களை பீதியடைய செய்தது.
மேலும் வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த பொய் தகவல் அனைத்தும் ஹேக்கர்களின் நாச வேலை என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அசோசியேட்டட் பிரஸ்ஸின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
இந்த சைபர் ஹேக்கிங்கை செய்தது யார் என்று அமெரிக்க புலனாய்வுதுறை விசாரித்துவருகிறது. இதற்கு முன்பாக செய்தி வெளியான சில மணி நேரத்தில் அமெரிக்க பங்கு சந்தை மளமளவென சரிந்தது.
இந்த நிலையில் சிரியாவின் அதிபர் பஷ்ஷர்-அல்-அசாதின் ஆதரவு படையாக கூறப்படும் சிரிய எலக்ட்ரானிக் ராணுவம் இந்த ஹேக்கிங்கிற்கு பொப்பேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.