புத்ரா ஜெயா : இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும், அதே வேளையில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே குழுவில் உறுப்பினர்களாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், மஇகாவின் செனட்டர் சிவராஜ் சந்திரன் ஆகியோர் செயல்படுவர்.
மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயரும் இந்தக் குழுவில் இடம் பெறுவார்.
இந்த சிறப்பு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் நாளை புதன்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆட்சிக் காலத்தில் பிரதமர் இலாகாவில் இந்தியர் உருமாற்றப் பிரிவு அமைக்கப்பட்டது. இந்திய சமுதாயத்திற்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பாக உருவான இது செடிக் என அழைக்கப்பட்டது.
பின்னர் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சிக்காலத்தில் 2018 செடிக் மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டது.