Home நாடு கெராக்கான் தலைவர் பதவிக்கு 4 முனைப் போட்டி

கெராக்கான் தலைவர் பதவிக்கு 4 முனைப் போட்டி

663
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடைபெறவிருக்கும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான் கட்சி 36 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் அந்தக் கட்சிக்கான தேர்தலும் ஜூலை 15-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நடப்பு தலைவர் டோமினிக் லாவ்வை எதிர்த்து 3 பேர் போட்டியிடுகின்றனர். அந்த மூவரும் தத்தம் அணியில் ஒரு துணைத் தலைவர் வேட்பாளரைக் கொண்டுள்ளனர்.

இதனால், கெராக்கான் தேர்தல் பரபரப்பு கூடியுள்ளது. தலைவராக வெற்றி பெறுபவர் அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தையும் கொண்டிருப்பார்.

#TamilSchoolmychoice

கட்சியின் மற்ற பதவிகளுக்கும் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.