Home நாடு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : இணைத் தலைவர்களாக சிவகுமார் – சரவணன் நியமனம் – அன்வார்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : இணைத் தலைவர்களாக சிவகுமார் – சரவணன் நியமனம் – அன்வார் உத்தரவு

583
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூலை 21 முதல் 23-ஆம் தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அரசாங்கமே முன்னின்று ஏற்று நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முடிவு செய்து அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இணைத் தலைவர்களாக மனித வள அமைச்சர் வ.சிவகுமாரும், மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவுக் கடிதத்தை  மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

வரலாற்றுபூர்வ உலகத் தமிழாய்ச்சி மாநாடு முதன் முதலில் கோலாலம்பூரில்தான் 1966-இல் நடத்தப்பட்டது. அப்போது மலாயாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தனிநாயகம் அடிகளார் அவர்களின் முயற்சியில் தொடங்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி அமைப்பாகும். அந்த அமைப்பின் ஏற்பாட்டில் 1966, 1987, 2015 ஆகிய ஆண்டுகளில் கோலாலம்பூரில் 3 முறை இந்த மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.

இப்போது 4-வது முறையாக இந்த மாநாடு கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது.