Home நாடு சனுசியின் டிக்டாக் காணொலிப் பக்கத்தை நாங்கள் முடக்கவில்லை – சைபுடின் நசுத்தியோன் தெளிவுபடுத்தினார்

சனுசியின் டிக்டாக் காணொலிப் பக்கத்தை நாங்கள் முடக்கவில்லை – சைபுடின் நசுத்தியோன் தெளிவுபடுத்தினார்

424
0
SHARE
Ad
சைபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர் : அண்மையில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரில் டிக்டாக் காணொலிப் பக்கத்தை அரசாங்கம் தடை செய்திருப்பதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் மறுத்துள்ளார்.

டிக்டாக் கணக்குகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மலேசியா வடகொரியாவைப் போல் மாறி வருவதாக கெடாவின் காபந்து மந்திரி பெசார் முகமட் சனுசி எம்டி நோர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் எழுந்த புகார்களினால் டிக்டாக் நிறுவனமே அவரின் காணொலிப் பக்கத்தை முடக்கியிருக்கலாம் எனவும் சைபுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“டிக்டாக் யாருடையது? சீனாவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் அது. டிக்டோக் பயனர்களுக்கு, மற்ற சமூக ஊடக தளங்களைப் போலவே எது அனுமதிக்கப்படலாம் அல்லது அனுமதிக்கக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளன.  டிக்டாக் கணக்குகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா? என்றால் பதில் இல்லை” என்று சைபுடின் தன் முகநூல் பதிவில் கூறினார்.

பல பயனர்கள் ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு எதிராக புகார் அளித்தால், டிக்டோக் ஒருவரின் கணக்கை தடை செய்யும் என்று உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.