Home கலை உலகம் ஆஸ்ட்ரோவில் ‘மாயா பஜார்’ – உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவை தொலைக் காட்சித் திரைப்படம்

ஆஸ்ட்ரோவில் ‘மாயா பஜார்’ – உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவை தொலைக் காட்சித் திரைப்படம்

467
0
SHARE
Ad

‘மாயா பஜார்’ –
ஜூலை 19-இல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்புக் காணும்  உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவை டெலிமூவியைக் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர் – ஜூலை 19, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் மாயா பஜார் எனும் உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவை டெலிமூவியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.

தேவகுரு, தாஷா கிருஷ்ணகுமார், கோமளா நாயுடு, டவியூ புவனன், ஃபீனிக்ஸ் தாசன் மற்றும் பலத் திறமையான உள்ளூர் கலைஞர்களைத் தாங்கி மலரும் மாயா பஜார் டெலிமூவியைப் புகழ்பெற்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர் தீபன் எம். விக்னேஷ் இயக்கியுள்ளார்.

வெவ்வேறு தனிப்பட்டப் பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய மாறுபட்டப் பார்வைகளைக் கொண்ட இரண்டு நபர்களை இந்த சுவாரசியமான டெலிமூவி சித்திரிக்கிறது. காதல் தோல்வியிலிருந்து முன்னேற முயற்சிக்கும் – விரைவில் கோபம் கொள்ளும் சந்தோஷையும், தன் விருப்பத்திற்காகப் பேசாத அமைதியானப் பெண்ணான வாணியையும் இந்த டெலிமூவி சித்திரிக்கிறது. இந்த இரண்டு அந்நியர்களும் ஒரு நாள் விபத்தில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களது எதிர் பாலினத்தை விமர்சிக்கும் போது கடுமையானச் சண்டையில் ஈடுபடுகின்றனர்.

#TamilSchoolmychoice

அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை ஒரு மர்ம மனிதர் தீர்க்கிறார். தங்கள் உடல்கள் மாற்றப்பட்டதைக் கண்டு சந்தோஷ் மற்றும் வாணி இருவரும் மறுநாள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த உடலை மீட்டெடுக்கிறார்களா? அந்த மர்ம மனிதருக்கு அவர்களின் உடல் இடமாற்றத்துடன் தொடர்புள்ளதா? என்பதே இந்த டெலிமூவியின் சாராம்சமாகும்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.