Home நாடு சனுசி முகமட் நூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

சனுசி முகமட் நூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

324
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருக்கின்றன.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் சூழலில் கெடா மந்திரி பெசார் சுல்தான் ஒருவரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் கெடாவும் ஒன்றாகும்.

பாஸ் கட்சியின் சார்பில் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் சனுசி தொடர்ந்து பேசி வருகிறார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் சுல்தானையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறை புகார்கள் செய்யப்பட்டன. விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.