Home நாடு கெடா அரிய மண் அகழ்வு விவகாரம் – 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

கெடா அரிய மண் அகழ்வு விவகாரம் – 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

337
0
SHARE
Ad
முகமட் சனுசி முகமட் நோர்

அலோர்ஸ்டார் : கெடா மாநிலத்தில் அரியவகை மண் அகழ்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

இதுவரை 12 நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்துள்ளது. இருவரைக் கைது செய்துள்ளது. ஆட்சிக் குழுவில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை உறுதிப்படுத்த – ஆட்சிக் குழு உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

கெடா மந்திரி பெசார் சனுசியும் இந்தத் தகவலை பத்திரிகையாளர்களிடம் உறுதிப்படுத்தினார். எனினும் அவர் இன்னும் விசாரிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice