Home நாடு மொகிதின் யாசின் ஸ்ரீ பெர்டானா இல்லத்திற்காக 38 மில்லியன் செலவிட்டார் – அன்வார் குற்றச்சாட்டு

மொகிதின் யாசின் ஸ்ரீ பெர்டானா இல்லத்திற்காக 38 மில்லியன் செலவிட்டார் – அன்வார் குற்றச்சாட்டு

365
0
SHARE
Ad

கோலாலம்பூர் : டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்காக 38 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டார் என அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.

ஸ்ரீ பெர்டானா ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த போதிலும், மொகிதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அன்வார் குறிப்பிட்டார்.

இவ்வளவு பெரிய தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டிருக்கலாம் எனவும் அன்வார் தெரிவித்தார். ஸ்ரீ பெர்டானாவில் மேம்பாடுகளுக்காக செலவழிக்கப்பட்ட பணம் மொகிதினின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வாயிலாக செலவிடப்பட்டது என்றும் அன்வார் தெரிவித்தார்.