Home நாடு “நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்

536
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் ‘நல்லார்க்கினியன்’ மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.

“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்…
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்…கவிதை என்பது சொல், பொருள் பதிந்து வாசகரின் மனதில் உணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறந்த எழுத்துகளால் சமுதாயத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். சிறந்த படைப்பாளர்கள், காலம் முழுதும் மக்கள் மனதில் நிலைத்திருக்க முடியும், வள்ளுவனும், பாரதியும் போல. ‘சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்..” என இந்த நிகழ்ச்சி குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் பதிவிட்டார்.

கவிஞர் பாதாசனுக்கு சிறப்பு செய்யப்படுகிறது

“பக்தி இலக்கியம் அல்லாமல் தமிழ்மொழி செம்மொழி தகுதியோடு இன்று நிலைத்திருக்க முடியாது. ஆக தமிழ்க்கல்வியோடு பக்தி இலக்கியத்தையும் சேர்த்து மாணவர்கள் கற்க வேண்டும். இடைநிலைப்பள்ளிகளில் தமிழை இன்னும் அதிகமான மாணவர்கள் கற்க வேண்டும். அண்மையில் பிரதமரின் அறிவிப்பு அதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்” என்றும் சரவணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice