Home நாடு மொகிதின் யாசின் மருமகன் தலைமறைவு – தேடிப் பிடிக்க இண்டர்போல் உதவி நாடப்படும்

மொகிதின் யாசின் மருமகன் தலைமறைவு – தேடிப் பிடிக்க இண்டர்போல் உதவி நாடப்படும்

372
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தேடப்பட்டு வருகிறார்.

அவரைத் தேடிக் கண்டுபிடிக்க இண்டர்போல் என்னும் அனைத்துலகக் காவல் துறையின் உதவி நாடப்படும் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் மொகிதின் யாசின் தனது மருமகன் தலைமறைவானது குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டார். 48 வயதான முகமட் அட்லான் மொகிதின் யாசினின் இரண்டாவது மகளை திருமணம் புரிந்தவர் ஆவார். அவருடன் சேர்த்து மன்சூர் சாட் என்ற 69 வயது நபரும் தேடப்படுகிறார்.

#TamilSchoolmychoice

முகமட் அட்லான் விசாரணைக்காக தேடப்படுவதாகவும் தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி அறிவித்தது.