Home நாடு வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சி ஏன்? கெடாவில் மட்டும் கூடுதலானோர் வாக்களிப்பு

வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சி ஏன்? கெடாவில் மட்டும் கூடுதலானோர் வாக்களிப்பு

385
0
SHARE
Ad

=கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பரவலான அளவில் வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது ஏன் என்ற விவாதங்கள் தொடர்கின்றன.

அம்னோவினர், சாஹிட் ஹாமிடி மீதான அதிருப்தியாலும் ஜசெகவுடன் அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்திருப்பது காரணமாகவும் அதிக அளவில் வாக்களிக்க வரவில்லை என்பது கூறப்படும் காரணங்களில் ஒன்றாகும்.

அப்படியே வாக்களிக்க வந்த அம்னோ ஆதரவு மலாய்க்காரர்களும் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு எதிர்த்து வாக்களித்தனர் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் நேஷனல் – பாஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு வந்து தங்களின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.

இதற்கு சிறந்த உதாரணம் கெடா மாநிலம் ஆகும். கெடாவில் பாஸ் மந்திரி பெசார் கிளப்பிய பிரச்சாரப் புயலால் ஒற்றுமை அரசாங்கமே அதிர்ந்தது. அன்வார் இப்ராகிமே பலமுறை அங்கு சென்று பிரச்சாரங்களில் கலந்து கொண்டார்.

வாக்களிப்புக்கு முதல் நாள் பிரதமர் பிரச்சாரம் செய்ய தேர்ந்தெடுத்த மாநிலமே கெடா ஆகும்.

15-வது பொதுத் தேர்தலோடு ஒப்பிடும்போது கெடா மாநிலத்தில் மட்டுமே வாக்களிப்பு விழுக்காடு அதிகரித்தது. கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்ததே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. அவரையே தொடர்ந்து மந்திரி பெசாராக நீடிக்கச் செய்யவே கெடா மலாய் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மற்ற மாநிலங்களில் வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. மற்ற மாநிலங்களுடனான வாக்களிப்பு விழுக்காட்டு ஒப்பீடு பின்வருமாறு:

கிளந்தான்

15-வது பொதுத் தேர்தல் 71.4 %
12 ஆகஸ்ட் 2023 சட்டமன்றத் தேர்தல் – 60.96 %

பினாங்கு

15-வது பொதுத் தேர்தல் 77.98 %
12 ஆகஸ்ட் 2023 சட்டமன்றத் தேர்தல் – 72.67 %

நெகிரி செம்பிலான்

15-வது பொதுத் தேர்தல் 78.3 %
12 ஆகஸ்ட் 2023 சட்டமன்றத் தேர்தல் – 67.4 %Negeri

சிலாங்கூர்

15-வது பொதுத் தேர்தல் 80.12 %
12 ஆகஸ்ட் 2023 சட்டமன்றத் தேர்தல் – 72.00 %

திரெங்கானு

15-வது பொதுத் தேர்தல் 81.00 %
12 ஆகஸ்ட் 2023 சட்டமன்றத் தேர்தல் – 74.9 %

கெடா

15-வது பொதுத் தேர்தல் 71.7 %
12 ஆகஸ்ட் 2023 சட்டமன்றத் தேர்தல் – 73.3 %