Home இந்தியா அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது! ஜெயகுமார் அறிவிப்பால் அதிர்ச்சி!

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது! ஜெயகுமார் அறிவிப்பால் அதிர்ச்சி!

383
0
SHARE
Ad

சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுக- பாஜக கூட்டணி முறிந்ததாக அறிவித்திருப்பது தமிழக அரசியிலில் புதிய திருப்பமாக அமைந்திருக்கிறது.

இந்த முடிவு நிரந்தரமானால், தமிழ் நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூடுதல் பலம் பெறும் எனக் கருதப்படுகிறது.

கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என ஜெயக்குமார் கூறியிருப்பதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலும் இந்தக் கூட்டணி முறிவுக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கூடிய விரைவில் அமித் ஷாவும் நரேந்திர மோடியும் அண்ணாமலைக்கும் – அதிமுக தலைவர்களுக்கும் இடையிலான மோதலை சமரசம் செய்து ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

அத்தகைய சமரச ஏற்பாட்டினால் அண்ணாமலை தமிழ் நாடு பாஜக தலைவராக தொடர்வாரா என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் “இந்தியா” என்ற கூட்டணி அமைத்திருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் அதிமுகவும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.