Home கலை உலகம் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ‘அக்கம் பக்கம்’ – உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடர்

ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ‘அக்கம் பக்கம்’ – உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடர்

501
0
SHARE
Ad

உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடர் ‘அக்கம் பக்கம்’ அக்டோபர் 2 ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் – அக்டோபர் 2 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் அக்கம் பக்கம் எனும் இதயத்தை வருடும் உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.

இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடரைத் திறமையான உள்ளூர் திரைப்பட இயக்குநர் யுவராஜ் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளரான டத்தின் ஸ்ரீ ஷைலா வி தயாரித்துள்ளார்.

அக்கம் பக்கம் தொடரில் ஹேமாஜி, அருண்குமரன், லோகன், சசி, கார்த்திக், வைஷா, அந்தோணி, டேவிட் போன்ற பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்த 24-அத்தியாயத் தொடர் மகேந்திரன் மற்றும் குலசேகரன் தலைமையிலான இரண்டுப் பணக்கார மற்றும் பிரபலமானக் குடும்பங்களுக்கு இடையிலான போட்டித் தன்மையைச் சித்திரிக்கின்றது.

#TamilSchoolmychoice

இவர்களுக்கிடையிலானப் போட்டித் தன்மையைப் புதியதாகக் குடிவந்தத் தம்பதியினரான அஞ்சலி மற்றும் வினோத் காண்கின்றனர். தனது அண்டை வீட்டாருடன் தொடர்பில் இருக்க முயற்சிக்கும் ஓர் எழுத்தாளரான அஞ்சலி இரு குடும்பங்களுக்கும் இடையிலான இந்த உறவைச் சரிசெய்ய முடிவு செய்கிறார். ஓர் அழகான மலேசிய இந்தியச் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கையில், அன்பும் வெறுப்பும் கலந்த அவர்களின் பயணம் முழுச் சுற்றுப்புறத்தையும் பாதிக்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் சுய வழியில் ஈடுபடுகிறார்கள்.

அக்கம் பக்கம் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.