ஆஸ்ட்ரோ மதிப்புமிக்க
‘உலகம் விருதுகள் 2023’
திறமையான உள்ளூர் கலைஞர்கள்- தயாரிப்புகளைக் கெளரவித்தது
கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோவின் மதிப்புமிக்க உலகம் விருதுகள் 2023 தொலைக்காட்சி, வானொலி, மின்னியல் மற்றும் திரையரங்கு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் உள்ளூர் திறமைகள் மற்றும் தயாரிப்புகளைக் கெளரவித்தது. தனது இரண்டாம் ஆண்டில் நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருதுகள் நிகழ்ச்சி, 4 அக்டோபர் 2023 அன்று ஆடிட்டோரியம் மஜ்லிஸ் பண்டாராயா ஷா ஆலாமில் (MBSA) மிக விமரிசையாக நடைப்பெற்றது. மேலும், ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
ஏரா டான்சர்ஸ், மில்லினியம் ஆர்ட்ஸ் டான்ஸ் அகாடமி, வெஹாரா ஆர்ட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ, ஜெய்ஸ் ஹார்மோனைசிங் பேண்ட், பேட்டல்கிரௌன் மலேசியா மற்றும் ரோஷினி பாலச்சந்திரன் ஆகியோரின் படைப்புகள், செயின்ட் டி.எப்.சி மற்றும் விக்னேஸ்வரி தொகுத்து வழங்கிய உலகம் விருதுகள் 2023-க்கு மேலும் மெருகூட்டியதோடு மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக மாற்றியது.
உலகம் விருதுகள் 2023 மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது: ‘பிரபல விருதுகள்’ பிரிவில் 18 துணைப்பிரிவுகள், ‘சிறந்த விருதுகள்’ பிரிவில் 14 துணைப்பிரிவுகள் மற்றும் ‘பிரத்தியேக விருதுகள்’ பிரிவில் 3 துணைப்பிரிவுகள் உள்ளன. உலகம் விருதுகள் 2023 வெற்றியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:
#TamilSchoolmychoice
பிரபல விருதுகள் – வெற்றியாளர்கள்
பிரபலமான முன்னணி ஆண் கதாப்பாத்திரம் (டெலிமூவி/தொடர்)
யுவராஜ் கிருஷ்ணசாமி (வேங்கையன் மகன்/கல்யாணம் 2
காதல் சீசன் 2/திட்டம் போட்டு கடத்துற கூட்டம்)
பிரபலமான முன்னணி பெண் கதாப்பாத்திரம் (டெலிமூவி/தொடர்)
மூன் நிலா (இறைவி திருமகள் காடு /தமிழ்லட்சுமி சீசன் 2)
பிரபலமானத் துணைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை (டெலிமூவி/தொடர்)
ஸ்ரீ குமரன் (தமிழ்லட்சுமி சீசன் 2)
பிரபலமான எதிர்மறைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை (டெலிமூவி/தொடர்)
சக்தி மாயா (பல்லவி பேக்கரி)
பிரபலமான நகைச்சுவைப் படைப்பு (டெலிமூவி/தொடர்)
குபேன் (ராம் லீலா லோக்டவுன்/நடுநிசி கேஎல்)
ஆண்டின் பிரபலமான டெலிமூவி
மனமே கேட்கவா
ஆண்டின் பிரபலமானத் தொடர்
கல்யாணம் 2 காதல் சீசன் 2
ஆண்டின் பிரபலமானத் தொலைக்காட்சி நிகழ்ச்சி
சரவெடி நைட்
பிரபலமானத் தொலைக்காட்சித் தொகுப்பாளர்
உதயா (சரவெடி நைட் / அட்டகாச பொங்கல்)
செய்தி அல்லது நடப்பு நிகழ்வுகளின் பிரபலமானப் படைப்பாளர்/தொகுப்பாளர்
மகேந்திரன் வேலுபிள்ளை (PRU15-Malaysia Memilih / ஆஸ்ட்ரோ செய்திகள்)
ஆண்டின் பிரபலமான அசல் பாடல் (OST) (டெலிமூவி/ தொடர்/ தொலைக்காட்சி நிகழ்ச்சி)
உன்னாலே (கல்யாணம் 2 காதல் சீசன் 2)
ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் பாடல் (ராகா)
செல்லம் மில்லா – தள்ளிபோகதே (வடை புரோடக்ஷன் (வெளியீட்டாளர்))
ஆண்டின் பிரபலமான இசையமைப்பாளர் (ராகா)
திலீப் வர்மன் (முதல் முதலாய்)
ஆண்டின் பிரபலமான அறிவிப்பாளர் (ராகா)
உதயா (ஹைபர்மாலை)
ஆண்டின் பிரபலமானப் பாடகர் (ராகா)
ஆமோஸ் பால் (முதல் முதல்)
பூச்சாண்டி திரைப்படத்திற்கான விருது பெறும் இயக்குநர் விக்கி
ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் திரைப்படம்
பூச்சாண்டி
பிரபலமான மின்னியல் உள்ளடக்கத் தயாரிப்பாளர்
குணாமேக்ஸ்