Home உலகம் இஸ்ரேல் மீது ஹாமாஸ் ஏவுகணைத் தாக்குதல் – 40 பேர் பலி; 700-க்கும் மேற்பட்டோர் காயம்

இஸ்ரேல் மீது ஹாமாஸ் ஏவுகணைத் தாக்குதல் – 40 பேர் பலி; 700-க்கும் மேற்பட்டோர் காயம்

435
0
SHARE
Ad
இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து நெத்தன்யாஹூவின் அவசரக் கூட்டம்

டெல் அவிவ் : பாலஸ்தீனத்தை ஆளும் ஹாமாஸ் இயக்கத்தினர் திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரையில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான பொது கிளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இருந்து சுமார் 2,200 ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் படைகளைத் திரட்டி காஸாவைத் தாக்கியது.

#TamilSchoolmychoice

இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ தற்போது ஏற்பட்டுள்ளது போர் சூழல் என அறிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவப் பெண்மணி ஒருவர் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.