Home உலகம் இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் 198 பாலஸ்தீனர்கள் பலி – மரணமடைந்த இஸ்ரேலியர்கள் 70 ஆக உயர்வு

இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் 198 பாலஸ்தீனர்கள் பலி – மரணமடைந்த இஸ்ரேலியர்கள் 70 ஆக உயர்வு

431
0
SHARE
Ad
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ

டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தாக்குதல்கள் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேல், காசா பகுதி மீது தீவிர இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் 198 பாலஸ்தீனர்கள் மரணமடைந்தனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனத்தை ஆளும் ஹாமாஸ் இயக்கத்தினர் திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 70 பேர் பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான பொது கிளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இருந்து சுமார் 2,200 ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் குறுகிய காலத்திற்குள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் படைகளைத் திரட்டி காஸாவைத் தாக்கியது. அந்தத் தாக்குதல்களில் 198 பாலஸ்தீனர்கள் மரணமடைந்தனர்.

இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ தற்போது இருதரப்புகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவப் பெண்மணி ஒருவர் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.