ஜோகூர் பாரு: கடந்த சட்டமன்ற தேதலில் போட்டியிடாவிட்டாலும், மஇகா 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
அதே வேளையில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் செயல் நடவடிக்கைகளில் மஇகா தீவிரமாக இறங்கி இருக்கிறது என அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கட்சியின் அடித்தளத்தையும், அடிமட்ட உறுப்பினர் பலத்தையும் நாம் பெருக்க வேண்டியதும் உறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியில் உறுப்பினர்கள் பெயரளவில் மட்டுமே இருப்பார்கள் என்றும் கட்சிக் கூட்டங்கள் நடக்கும்போது போதுமான உறுப்பினர்களை அந்த கூட்டங்கள் கொண்டிராத நிலைமை ஏற்படுகிறது எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
#TamilSchoolmychoice
இந்த நிலைமைய சீர்செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் இது தொடர்பில் மஇகா சட்டவிதிகள் திருத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மஇகா மாநில ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரைஆற்றிய போதே விக்னேஸ்வரன் இந்த விவரங்களை வெளியிட்டார்.