கோலாலம்பூர்,ஜன.29- அடுத்தாண்டு தொடங்கி பொங்கல் விழாவிற்கு அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று தைப்பூச விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த துணைப்பிரதமரும், கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.
தைப்பூச திருவிழாவிற்கும், பொங்கல் பண்டிகைக்கும் பொது விடுமுறை வழங்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
தைப்பூச திருவிழாவிற்கு சில மாநிலங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் துணை பிரதமர் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக பலர் தெரிவித்தனர்.
தைப்பூசம், பொங்கல் ஆகியவற்றிக்கு பொது விடுமுறை வழங்க வேண்டும் என்று பத்துமலை திருத்தலம் உள்ளிட்ட பல அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன் வைத்துள்ளது. இவ்விவகாரம் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் துணை பிரதமர் கூறியுள்ளார்.