Home உலகம் காசாவின் மிகப் பெரிய மருத்துவமனைக்குள் இஸ்ரேல் இராணுவம் அதிரடி வேட்டை

காசாவின் மிகப் பெரிய மருத்துவமனைக்குள் இஸ்ரேல் இராணுவம் அதிரடி வேட்டை

397
0
SHARE
Ad
கோப்புப் படம்

டெல் அவிவ் : பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையை இஸ்ரேலிய இராணுவம் சுற்றி வளைத்து அதிரடியாக உள்ளே புகுந்துள்ளது. மிகவும் துல்லியமாக இலக்கிடப்பட்ட நடவடிக்கை இது என்றும் இஸ்ரேலிய இராணுவம் வர்ணித்தது.

அந்தப் பகுதிக்குள் மிக விரிவான சுரங்கப் பாதை ஒன்று இருக்கிறது எனக் கூறிவரும் இஸ்ரேல் அதுகுறித்த ஆதாரங்களை இதுவரை வெளியிடவில்லை. எனினும் இஸ்ரேலிய இராணுவம் அங்கு ஹாமாஸ் படையினர் பயன்படுத்திய இராணுவ ஆயுதங்களைக் கண்டெடுத்ததாக கூறியது.

ஹாமாஸ் இயக்கத்தை முற்றாக அழிக்கும் நோக்கத்தோடு தாக்குதல்களை நடத்திவருகிறது இஸ்ரேலிய இராணுவம். ஹாமாஸ் வடக்கு காசா, காசா நகர் பகுதிகளில் தங்களின் ஆதிக்கத்தை இழந்து விட்டது என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருக்கிறது.