Home உலகம் காசாவை மீண்டும் தாக்கிய இஸ்ரேல்

காசாவை மீண்டும் தாக்கிய இஸ்ரேல்

552
0
SHARE
Ad

டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீடித்து வரும் ஆறு வார கால மோதல் அடுத்த 4 நாட்களுக்கு போர்நிறுத்தம் காணும் என்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதன் காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை வரை பணயக் கைதிகள் விடுதலை நடைபெற வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காசா வட்டாரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போராட்டத்தால் இதுவரையில் பல குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றன.