டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீடித்து வரும் ஆறு வார கால மோதலுக்குப் பிறகு மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தைத் கடைபிடிப்பதற்கான உடன்படிக்கை காணப்பட்டுள்ளது.
உடன்பாட்டைத் தொடர்ந்து, ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட 50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகள் 300 பேரை விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.
பரிமாறப்படும் கைதிகளில் பெண்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் முதலிடம் தரப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், 300 பாலஸ்தீனிய கைதிகள், 150 பெண்கள் மற்றும் சிறார்களின் பெயர்கள் உள்ளன.
300 கைதிகளில் மொத்தம் 287 பேர் 18 வயதுக்குட்பட்ட மற்றும் அதற்குக் குறைவான ஆண்கள், அவர்களில் பெரும்பாலோர் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் கலவரம் மற்றும் கல் எறிதல் ஆகியவற்றிற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
அவர்களில் 13 பேர் மூதாட்டிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆறு மணி நேரக் கூட்டத்திற்குப் பிறகு, கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் பன்னாட்டு முயற்சிகளின் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு தொடங்கும்.
ஹமாஸால் விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் கூடுதல் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேலிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்தம் முடிந்த பிறகும் ஹமாஸுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்திருக்கிறார்.
ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிக்கும் இலக்கை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.