Home நாடு “உரிமை” – புதிய இந்திய அரசியல் கட்சி-வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் – இராமசாமி கூறுகிறார்

“உரிமை” – புதிய இந்திய அரசியல் கட்சி-வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் – இராமசாமி கூறுகிறார்

493
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) தனது தலைமையில் தோற்றம் காணும் ‘உரிமை’என்னும் புதிய அரசியல் கட்சியின் எதிர்காலம் குறித்து வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் என பேராசிரியர் பி.இராமசாமி கூறியுள்ளார்.

இதன் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தற்போதுள்ள இந்திய அரசியல் கட்சிகள் சமூகத்தை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்த தவறிவிட்டன. இந்திய சமூகத்தில் பெரும்பாலோர் தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.

சுதந்திரமான மற்றும் இந்தியர்களின் உரிமைகளைப் பெறுவதில் தீவிரமான தலைவர்களைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி சமூகத்திற்குத் தேவை.

பல இனத்தவர்

#TamilSchoolmychoice

பல இன அரசியல் கட்சிகள் என்று அழைக்கப்படுபவை இந்திய சமூகத்தை திறமையாகவும் நேர்மையாகவும் பிரதிநிதித்துவப்படுத்த தவறிவிட்டன.

இந்த அரசியல் கட்சிகள் பல இனக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு சமூகத்தின் இன, கலாச்சார மற்றும் மத அக்கறைகளை குறைத்து மதிப்பிடுகின்றன.

இத்தனைக்கும், இந்தக் கட்சிகளின் பல்லின அரசியல் இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கின்றன.

இந்த பல இன அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும் வரை இந்திய ஆதரவு தேவைப்பட்டது. கட்சித் தலைவர்கள் இன சமத்துவம், சம உரிமைகள் மற்றும் பிறவற்றைப் பற்றி பேசினார்கள்.

இருப்பினும், இந்த அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன், இந்திய சமூகத்தின் மீதான அக்கறை சிதறியது.

போதாத தலைமை

இந்தியத் தலைவர்கள் பல இனக் கட்சிகளில் இருந்து எம்.பி.க்களாகவும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் துணைமைச்சர்களாகவும், ஒரு அமைச்சராகவும், ஒரு சிலர் மாநில ஆட்சிக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் இந்தக் கட்சிகளில் மூத்த பதவிகளை வகிப்பதில்லை, ஒருவர் அல்லது இருவர் கட்சிப் பதவிகளை வகித்தாலும், அவர்கள் இந்தியரல்லாத தலைவர்களின் விருப்பப்படியே செயல்படுகிறார்கள்.

மரியாதை இல்லை

பொதுவாகச் சொன்னால், இந்த அரசியல் கட்சிகளில் உள்ள இந்தியத் தலைவர்களுக்கு இந்தியரல்லாத தலைவர்களிடமிருந்து மரியாதை அல்லது கண்ணியம் இல்லை.

இதைப் பார்க்கும்போது, ​​இந்திய சமூகம் அவர்களை எப்படி உயர்ந்த மரியாதையுடன் பார்க்க முடியும்?

மேலும், சமூகத்தின் ஆழமான மற்றும் அடிப்படையான தேவைகளை அவர்கள் இந்தியர் அல்லாதவர்களை அந்நியப்படுத்தாமல் எப்படி வெளிப்படுத்த முடியும்?

சமூகத்திற்குத் தேவையான பல்வேறு பிரச்சினைகள் மாநில அல்லது தேசிய அளவில் அரிதாகவே பேசப்படுகின்றன.

தற்போதைய சிக்கல்கள்

குடியுரிமைச் சட்டத்தில் சமீபத்திய திருத்தங்கள், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் திட்டங்களில் சமமற்ற மாணவர் சேர்க்கை, தனியார் மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாமை, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள தமிழ்ப் பள்ளிகள் எதிர்கொள்ளும் ஆபத்து, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பித்தல் போன்ற மேலும் பல சிக்கல்களை இந்திய சமூகத்தை ஆட்கொண்டிருக்கின்றன.

பரிதாபகரமான பட்ஜெட் 2024

2024 பட்ஜெட்டில், இந்திய சமூகத்திற்கு RM130 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது—மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) RM100 மில்லியன் மற்றும் இந்திய தொழில் முனைவோர் திட்டங்களுக்காக RM30 மில்லியன்.


இத்தகைய ஒதுக்கீடு இந்திய சமூகத்திற்கு கடலில் விழுந்த ஒரு துளி. உண்மையில், இந்தியர்கள் நாட்டிற்குச் செய்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு RM2 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட்டைப் பாராட்டி வரவேற்ற இந்தியத் தலைவர்களும் இருந்தனர். என்ன ஒரு அவமானம் மற்றும் சோகம்!

இந்தியர்கள் மீது ரொட்டித் துண்டுகளை வீச வேண்டிய அவசியம் இன்றைய அரசுக்கு இல்லை. சமூகத்திற்கு அறிக்கைகள் தேவையில்லை. சம உரிமையின் அடிப்படையில் அவர்களை நாட்டின் குடிமக்களாக அரசாங்கம் அங்கீகரிப்பதுதான் முக்கியத் தேவை.

இந்தியர்களுக்குத் தங்கள் உரிமைகளைப் பற்றி தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசாத தலைவர்கள் தேவையில்லை.

நிச்சயமாக, இந்தியர்களுக்குத் தங்கள் மீது அக்கறை இல்லாத பிறருக்கு அடிபணியும் தலைவர்கள் தேவையில்லை.

வெற்றிடம்

இந்திய சமூகத்தை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் அதிகாரமற்றவர்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி/இயக்கம் தேவை.

அத்தகைய ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தோற்றம் இந்திய பிரதிநிதித்துவத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அத்தகைய கட்சி அல்லது இயக்கம் சமூகத்தின் பரந்த மற்றும் ஆழமான தேவைகளை வெளிப்படுத்த தற்போதைய குறுகிய பிரதிநிதித்துவ வடிவங்களின் குறுகிய வட்டத்துக்கு அப்பால் எடுத்துச்செல்லும் பட வேண்டும்.

எவ்வளவோ தியாகம் செய்த சமூகம், ஆனால் கிடைத்திருப்பது மிகக் குறைவே.

சரித்திரம் தீர்ப்பளிக்கட்டும்

இந்தியர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள், பன்முகத் தன்மை கொண்டவர்கள். ஆனாலும் சமூகம் ஒரு புதிய அரசியல் கட்சி அல்லது இயக்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதற்காக அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதால் புதிய அரசியல் உரிமைகளை முன்னெடுக்க கட்சித் தளம் தேவைப்படுகிறது.

புதிய வடிவிலான பிரதிநிதித்துவம் வெற்றி பெறுகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பதை சரித்திரம் சிறந்த தீர்ப்பாக வழங்கும் என்று நான் நினைக்கிறேன்.