Home உலகம் காசாவில் 4 நாள் போர் நிறுத்தம்

காசாவில் 4 நாள் போர் நிறுத்தம்

656
0
SHARE
Ad

டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீடித்து வந்த 7 வாரகால போர் ஒருவழியாக 4 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் இரு தரப்புகளுக்கும் இடையிலான பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 4 நாட்களுக்கு போர்நிறுத்தம் காணும் என்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் நேற்று வியாழக்கிழமை தாக்குதலை நடத்தியது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் காசா வட்டாரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போராட்டத்தால் இதுவரையில் பல குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.