Home உலகம் இஸ்ரேல் 30 பாலஸ்தீன பணயக் கைதிகளை விடுதலை செய்தது

இஸ்ரேல் 30 பாலஸ்தீன பணயக் கைதிகளை விடுதலை செய்தது

311
0
SHARE
Ad
படம் : நன்றி – அல்ஜசீரா

டெல் அவிவ் : இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து மேலும் 30 பெண்களும் சிறார்களும் காசாவில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், இந்த விடுதலைக்கு முன்னதாக பாலஸ்தீனம் தரப்பிலிருந்து 10 இஸ்ரேலியர்களும் 2 வெளிநாட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் மேற்குக் கரையோரப் பகுதியில் ஜெனின் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றை முற்றுகையிட்ட இஸ்ரேலிய இராணுவம், மருத்துவமனை வாயிலை மூடியதோடு, மருத்துவர் குழுக்களின் பணிகளையும் நிறுத்தியது என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 7 தொடங்கி, இதுவரையில் 15 ஆயிரம் பாலஸ்தீனர்கள் காசா பகுதியில் போரினால் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காசாவில் நீடிக்கும் 5 நாட்கள் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து இதுவரையில் ஹாமாஸ் 81 பணயக் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறார்களும் ஆவர்.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஜோ பைடன் சார்பில் பணயக் கைதிகளின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்திவரும் சிஐஏ என்னும் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் தற்போது கத்தாரில் தங்கியிருந்து மேலும் விரிவான பணயக் கைதிகள் பரிமாற்றம் குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இன்னும் 90 இஸ்ரேலியப் பணயக் கைதிகளைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக ஹாமாஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.