Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘தேஜாவு 375’ உள்ளூர் தமிழ் குற்றவியல் திரில்லர் தொடர்

ஆஸ்ட்ரோ : ‘தேஜாவு 375’ உள்ளூர் தமிழ் குற்றவியல் திரில்லர் தொடர்

415
0
SHARE
Ad

 ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் ‘தேஜாவு 375’ –
உள்ளூர் தமிழ் குற்றவியல் திரில்லர் தொடர்

கோலாலம்பூர் – முதல் ஒளிபரப்புக் காணும் தேஜாவு 375 எனும் உள்ளூர் தமிழ் குற்றவியல் திரில்லர் தொடர் தற்போது ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.

டிசம்பர் 18 தொடங்கி, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடர் முதல் ஒளிபரப்பு கண்டு வருகிறது.

தேஜாவு 375 – ஆஸ்ட்ரோ அறிமுக நிகழ்ச்சியில்…

பிரபல உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமானக் கோவிந்த் சிங் இயக்கிய ‘தேஜாவு 375’ திரைப்படத்தில் உள்ளூர் திறமையாளரான மூன் நிலா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், மேலும் சூர்ய பிரகாஷ், ஆனந்தா ராஜாராம், ஷாமினி, டேவிட் அந்தோணி, எம்.ஜே.நாடா மற்றும் சிறிய இடைவேளைக்குப் பிறகு கலைத்துறையில் மீண்டும் இணைந்தப் பிரபல நடிகை ஜெயஸ்ரீ உடன் இணைந்து பலர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கின் பொறுப்பை ஏற்கும் மாற்றுத் திறனாளி, பைரவி எனும் இளம் வழக்கறிஞரை இந்தக் குற்றவியல் திரில்லர் தொடர் சித்திரிக்கிறது. ரீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் யுகேஸ் மற்றும் சுரேஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது இந்தத் தொடர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கக் குற்றவாளியை வேட்டையாடுவதில் பைரவி உறுதியாக இருக்கிறார். நகரத்தில் சிறுமிகள் கடத்தப்படும் கதைக் களத்துடன் இந்தத் தொடர் தொடங்குகிறது. அவரது இரட்டைச் சகோதரியானப் பவானியும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்பதை அறிந்தும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகப் பைரவி முடிவுச் செய்யும் போதுக் கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

இருப்பினும், ஒரு விபத்தினால் பைரவி சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டபோது விஷயங்கள் சிக்கலாகின்றன. தன் சகோதரியின் மறைவுக்குப் பிறகு இல்லாதது இருப்பதுப் போலத் தோன்றும் தோற்றத்தையும் மனநலத்திறனையும் அடைந்தப் பிறகு, வழக்கைத் தீர்ப்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார் – இந்தப் பரபரப்பானத் திரில்லரில் பைரவி வழக்கை வெற்றிகரமாகத் தீர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்பதை நிரூபிக்கிறாரா என்பதைக் கண்டறிக.

தேஜாவு 375 தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.