Home கலை உலகம் சம்பளம் வாங்காமல் காதல் தோல்வி பாடலில் நடித்த நயன்தாரா

சம்பளம் வாங்காமல் காதல் தோல்வி பாடலில் நடித்த நயன்தாரா

795
0
SHARE
Ad

nayantaraசென்னை, ஏப்ரல் 26- பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ஒரு குத்துபாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை முதன் முறையாக தயாரிக்கிறார் தனுஷ்.

இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் காதல் தோல்வியில் வேதனையாக இருக்கும் நேரத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல… பத்து நாளா சரக்கு அடிச்சேன் போதையே இல்ல‘ என்ற குத்து பாடல் இடம்பெறுகிறது.

#TamilSchoolmychoice

இப்பாடலுக்கு நடனமாடி நடிக்க தனுஷ் முடிவு செய்தார். ஜோடியாக ஆட நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் யோசனை கூறினார்.

இதுபற்றி நயன்தாராவிடம் தனுஷும் இயக்குனர் துரை செந்தில்குமாரும் கூறிய போது உடனடியாக நயன்தாரா ஒப்புக்கொண்டார்.

அத்துடன் இந்த பாடலுக்காக சம்பளம் எதுவும் அவர் வாங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அணிய வேண்டிய ஆடைகளைக்  கூட நயன்தாராவே எடுத்து வந்து நடமானடியுள்ளார்.