Home நாடு விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி – “ஒற்றுமையுடன் செயல்படுவோம், பலன் பெறுவோம்”

விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி – “ஒற்றுமையுடன் செயல்படுவோம், பலன் பெறுவோம்”

294
0
SHARE
Ad

மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின்
புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இன்று பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு முதலில் அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மலர்கின்ற இந்த புத்தாண்டு இந்திய சமுதாயத்திற்கு உயரிய வாழ்வையும் வற்றாத வளங்களையும் நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். மலேசிய இந்தியர்கள் என்ற ஒரே குடையின் கீழ் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையோடு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவோம்.

பொதுவாக புத்தாண்டினை நாம் எப்போதுமே நம்பிக்கையுடன்தான் வரவேற்கிறோம் என்றாலும் கூட சில நேரங்களில் இயற்கையின் சீற்றத்திற்கு நாடும் மக்களும் ஆளாக நேரிடுகின்றது. குறிப்பாக அரசியல் மாற்றங்களை உதாரணமாக கூறலாம். எது எப்படி இருந்தாலும் இந்தியர் என்ற அடிப்படையில் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையோடு செயல்பட்டால் பலன் பெற்ற சமுதாயமாக நாம் உருமாற  முடியும்.

#TamilSchoolmychoice

இது போன்ற சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்கள் நம்மைச் சுற்றி இருப்பார்களேயானால் அவர்களின் துன்பங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு பக்க பலமாக இருப்போம். ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் பல மாற்றங்களை சந்தித்து வந்தாலும் இந்த சவால்களை எல்லாம் எதிர்த்து நின்று போராடுவதற்கு நமக்கு துணிவும் மனோபலமும் வேண்டும். இந்த தடைக் கற்களை எல்லாம் உடைத்து நாம் சந்தித்து வந்த காயங்களுக்கு எல்லாம் மருந்தாக மலரும் இந்த புத்தாண்டு ஒரு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தர வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறை அருளை வேண்டி நம்பிக்கையுடன் 2024 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.