Home நாடு பிரதமர் – மாமன்னர் – புதிய அரசியல் உறவு சகாப்தம் தொடங்கியது

பிரதமர் – மாமன்னர் – புதிய அரசியல் உறவு சகாப்தம் தொடங்கியது

350
0
SHARE
Ad
ஜனவரி 31-ஆம் தேதி மாமன்னர்-பிரதமர் சந்திப்பின்போது…

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் சாசனத்தில் மாமன்னர் – பிரதமர் இடையிலான அரசியல் உறவு என்பது சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இயங்கும் சட்ட ரீதியான இந்த உறவு அரசாட்சி சட்ட நடைமுறைகளைக் கொண்ட மற்ற நாடுகளை விட வேறுபட்டது.

உதாரணமாக, பிரிட்டனில் எலிசபெத் ராணியார் மிக நீண்ட காலமாக அரசியாராக பதவி வகித்தார். பல பிரதமர்களைப் பார்த்தவர். மரணம் வரை அவரே அரசியாராகத் திகழ்ந்தவர்.

ஆனால் மலேசியாவிலோ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமன்னர் மாறுவார். அதற்கேற்ப பிரதமராக இருப்பவரும் மாமன்னரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தன் அணுகுமுறைகளையும் மாற்றிக் கொள்ள நேரிடும். உதாரணமாக 2018-இல் துன் மகாதீர் பிரதமரான போது, மாமன்னராக இருந்தவர் கிளந்தான் சுல்தான். ஆனால் அடுத்த ஓராண்டிலேயே மகாதீர் பிரதமராக இருந்தபோது, பகாங் சுல்தான் மாமன்னரானார்.

#TamilSchoolmychoice

2022 நவம்பரில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமரானபோது, மாமன்னராக இருந்தவரும் பகாங் சுல்தான்தான். ஆனால் புதன்கிழமை ஜனவரி 31 முதல் மாமன்னராக செயல்படத் தொடங்கியிருக்கிறார் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம்.

புதன்கிழமை (ஜனவரி 31) புதிய மாமன்னராகப் பதவியேற்றுக் கொண்ட ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் தன் கடமைகளைத் தொடங்கினார். தன் முதல் நாள் பணிகளில் ஒன்றாக மாமன்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.

இனி அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய மாமன்னர் – பிரதமர் இடையிலான அரசியல் உறவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்து மலேசிய அரசியல் நிலவரங்களும் மாறக் கூடும்.