Home கலை உலகம் ஆஸ்ட்ரோவில் ‘பிக் ஸ்டேஜ் தமிழ்’ மீண்டும் மலர்கிறது

ஆஸ்ட்ரோவில் ‘பிக் ஸ்டேஜ் தமிழ்’ மீண்டும் மலர்கிறது

201
0
SHARE
Ad

*சீசன் 2-இன் முதல் ஒளிபரப்புடன் பிரபலமான உள்ளூர் ரியாலிட்டி பாடல் போட்டியானப் ‘பிக் ஸ்டேஜ் தமிழ்’ ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலர்கிறது.

*பிப்ரவரி 11 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் – புதிய உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்ந்து, ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் தங்கள் இலக்குகளைத் தொடர இந்தத் தளத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியானப் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-உடன் மீண்டும் மலர்கிறது. 11 பிப்ரவரி 2024 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் இந்தப் பிரபல உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படியேக் கண்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 1-இன் வெற்றியைத் தொடர்ந்து, இன்னும் சுவாரசியமான அம்சங்களுடன் இந்த நன்கு விரும்பப்பட்ட உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியின் சீசன் 2-ஐ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதுவரை ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் கண்ட எங்களின் பிற அசல் உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டிகளை விட, பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 1, 56% அதிக இரசிகர்களின் எண்ணிக்கையைப் பெற்ற மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்பதைப் பகிர்ந்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சீசன் 2 தொடர்ந்து எங்களின் இரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தப் புதியச் சீசனைக் கண்டுக் களிப்பார்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

10 வாரச் சவாலான போட்டியைக் கையாளும் நோக்கில் போட்டியாளர்கள் தங்களின் குரல் திறனை மேம்படுத்த வழிகாட்டும் புகழ்பெற்ற உள்ளூர் இசையமைப்பாளர் ஜெய்யை முதல் முறையாக ஒரு வழிகாட்டுநராக பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2 அறிமுகப்படுத்தும். நடுவர்களாகப் பொறுப்பேற்கும் உள்ளூர் இசைத்துறையைச் சேர்ந்த பாடகர்களான டாக்டர் பர்ன் மற்றும் ப்ரீத்தா பிரசாத் அவர்களுடன் கைகோக்கும் பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் எனப் பல்துறையில் பிரசித்திப் பெற்றச் சர்வதேச ஐகானான யுகேந்திரன் வாசுதேவனை இந்த ரியாலிட்டி பாடல் போட்டி தாங்கி மலரும். ஆழ்ந்த இசை அறிவு மற்றும் திறன்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் பல வருட அனுபவங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பன்முகத் திறன் கொண்ட நடுவர்கள், போட்டியாளர்கள் தங்களைப் பெரிதும் சவால் செய்யவும் குறிப்பிடத்தக்கப் படைப்புகளின் தரநிலைகளை அடையவும் ஊக்குவிப்பர்.

#TamilSchoolmychoice

குக்கூ நிதி ஆதரவாளராக திகழும் இப்போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்வதோடுக் குக்கூ தயாரிப்புகளையும் வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:

முதல் நிலை வெற்றியாளர்: ரிம50,000, குக்கூ கிராண்டே நீர் சுத்திகரிப்பான் (Cuckoo Grande Water Purifier) மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளராகும் ஓர் அரிய வாய்ப்பு;

இரண்டாம் நிலை வெற்றியாளர்: ரிம25,000 மற்றும் குக்கூ யு மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo U Model Air Purifier);

மூன்றாம் நிலை வெற்றியாளர்: ரிம10,000 மற்றும் குக்கூ பி10 பிரஷர் மல்டி குக்கர் (Cuckoo P10 Pressure Multi-Cooker); மற்றும்

ஆறுதல் பரிசுகள்:

இறுதிச் சுற்றின் 2 வெற்றியாளர்கள் (சுற்று 2): ஒவ்வொருவருக்கும் தலா ரிம5,000; மற்றும் இறுதிச் சுற்றின் 2 வெற்றியாளர்கள் (சுற்று 1): ஒவ்வொருவருக்கும் தலா ரிம3,000;

பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐ புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களானச் செயின்ட் டிஎப்சி மற்றும் விக்கி ஆகியோர் தொகுத்து வழங்குவர். இருபத்து நான்கு போட்டியாளர்களுக்கு இடையேயானக் கடுமையானப் போட்டியால் பார்வையாளர்கள் கவர்ந்திழுக்கப்படுவர் என்பது உறுதி – தனுஜா; தேவஸ்வரா; பிரிதாஸ்ரீ; நித்தியன்; யோஷினி; பிரவீன்; பெர்ம சந்திரா; நேசன்; சாருஹாஷினி; பவித்ரன்; ரம்யா; தனசேகரன்; கஜேந்திரன்; நிஷாதேவி; லச்மன்; ஷெர்லி; லக்ஷ்மன்; திவ்யா; ரூஹன்; உன்னிதெய்வன்; யாசஸ்கரன்; பொன்னியமுனன்; ஜீவன்ராஜ்; மற்றும் திஷாலன்.

பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள். சீசன் 1-ஐ காணத் தவறவிட்டுவிட்டீர்கள் என்றால், எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள். பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியானப் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழ இப்போதே ஆஸ்ட்ரோ பிரைமரி தொகுப்பின் சந்தாதாரராகுங்கள்.