Home கலை உலகம் ஆஸ்ட்ரோ – 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்...

ஆஸ்ட்ரோ – 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது

549
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மிக நீண்ட தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு (Longest Thaipusam Festival Celebration Live Broadcast) – ஒரு தனிநபரால் தொகுத்து வழங்கப்பட்ட மிக நீண்டத் தைப்பூசக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு (Longest Thaipusam Celebration Live Broadcast Hosting By An Individual) – என இரு பிரிவுகளுக்காக ஆஸ்ட்ரோவின் முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

பிரேம் ஆனந்த் (ஆஸ்ட்ரோவின் இந்திய வர்த்தகப் பிரிவு உதவித் தலைவர், மீனாகுமாரி (24 மணி நேர தைப்பூச நேரலையின் அறிவிப்பாளர்…

ஜனவரி 24, இரவு 9 மணி முதல் ஜனவரி 25, இரவு 9 மணி வரை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பாகிய இந்த முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்புப், பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கைப்பட்டாணி ஆகியவற்றிலுள்ள புகழ்பெற்ற உள்ளூர் ஆலயங்களின் நேரலை அறிவிப்புகளைப் பகிர்ந்துக் கொண்ட 19 தொகுப்பாளர்கள் வரிசையை உள்ளடக்கிய முதல் தொடர்ச்சியான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பாகும்.

பிரேம் ஆனந்த், மீனாகுமாரி ஆகியோருடன் மலேசியா சாதனைப் புத்தகத்தின் அதிகாரிகளில் ஒருவரான லீ பூய் லெங்…

இதுவரை ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்பட்ட அனைத்து தைப்பூச நேரலை ஒளிபரப்புகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தைப்பூச நேரலை ஒளிபரப்பு இரசிகர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டை விட 192% அதிகரிப்புடன் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. #நன்றிகந்தா என்றக் கருப்பொருளில் மலர்ந்த இந்த முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் குட்டே நிதி வழங்கி ஆதரித்தது.

ஆஸ்ட்ரோவின் ஜெகன் மாணிக்கம் வாஷ், ராகா வானொலியின் சுப்ரமணியம் வீராசாமி, பிரேம் ஆனந்த், லீ பூய் லெங் (மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரி), ஆஸ்ட்ரோவின் குப்புசாமி சந்திரகாஸ்
#TamilSchoolmychoice

6 பிப்ரவரி 2024 புக்கிட் ஜாலீலில் உள்ள ஆஸ்ட்ரோ தலைமையகத்தில் நடைப்பெற்ற விருது விழாவின் போது, ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் ஆஸ்ட்ரோ குழுவுடன் இணைந்து, மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரியான லீ புய் லெங்கிடம் இருந்து மிக நீண்டத் தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு என்ற பிரிவிற்கான மதிப்புமிக்க நற்சான்றிதழைப் பெற்றார். ஒரு தனிநபரால் தொகுத்து வழங்கப்பட்ட மிக நீண்டத் தைப்பூசக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு என்ற பிரிவிற்கான மதிப்புமிக்க நற்சான்றிதழை முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு தொகுப்பாளர்களின் ஒருவரான மீனா குமாரி பெற்றார்.

1995-இல் நிறுவப்பட்டதிலிருந்து, மலேசியா தொடர்பான அனைத்து குறிப்பிடத்தக்க விஷயங்களுக்கும் அதிகாரப்பூர்வப் பதிவுக் காப்பாளராக மலேசிய சாதனைப் புத்தகம் செயல்பட்டு வருகிறது. புதிய உயரங்களை அடையவும் சாதனைகளைச் செய்யவும் மலேசியர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட மலேசிய சாதனைப் புத்தகம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக அவர்களை கௌரவிக்கும் மலேசியாவின் ஒரே நிறுவனம் என்றப் பெருமையைப் பெறுகிறது.

நேரலை ஒளிபரப்பை நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள் என்றால், இப்போது ஆஸ்ட்ரோ உலகம் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யுங்கள். மேல் விவரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.