Home நாடு சுங்கத்துறை உயர் அதிகாரி ஷாஹாருடின் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!

சுங்கத்துறை உயர் அதிகாரி ஷாஹாருடின் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!

600
0
SHARE
Ad

Deputy-DG-Shotபுத்ரா ஜெயா, ஏப்ரல் 26- மலேசிய சுங்கத்துறை துணை இயக்குனரான ஷாஹாருடின் இப்ராஹிம் இன்று காலை புத்ரா ஜெயாவில் அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று காலை 8.40 மணியளவில் வழக்கம் போல் தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த ஷாஹாருடின் இப்ராஹிமை, லெபோ வாவாசன் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாஹாருடினுடைய ஒட்டுநர் அவரை உடனடியாக புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, வழியிலேயே ஷாஹாருடின் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பிலிருந்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது.