Home அரசியல் இந்தியர்களின் உணர்வுகளை மதிக்காதவருக்கு நாடாளுமன்ற தொகுதி ஏன்? குலசேகரன் கேள்வி

இந்தியர்களின் உணர்வுகளை மதிக்காதவருக்கு நாடாளுமன்ற தொகுதி ஏன்? குலசேகரன் கேள்வி

703
0
SHARE
Ad

m-kulasegaranஈப்போ, ஏப்ரல் 26- இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த பிரதமர் நஜிப் மீதும், தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் இந்திய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு வழக்கறிஞராக இருந்த சுல்கிப்ளிக்கு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் எவ்வாறு பேச வேண்டும் என்று கூட தெரியவில்லையே, பின் இவர் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அத்தொகுதி மக்களுக்காகப் பாடுபட முடியும் என்றும் குலசேகரன் கூறியுள்ளார்.

அத்துடன் இந்து மதம் குறித்த சுல்கிப்ளியின் விமர்சனத்திற்கு இந்திய அமைப்புகள் அனைத்தும் அவர் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வரும் வேளையில்,

#TamilSchoolmychoice

அதை பொருட்படுத்தாமல் பிரதமர் நஜிப், சுல்கிப்ளிக்கு ஷாஆலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கியிருக்கிறார்.

இதன் மூலம்  நஜிப் முன்பு இந்திய மக்களுக்காக கொடுத்த ‘ நம்பிக்கை’ என்ற வாக்குறுதி வெறும் நாடகம் என்று இப்போது தெரியவந்துள்ளது என்று குலசேகரன் தெரிவித்துள்ளார்.