Home உலகம் காசா எல்லைகளை, மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் திறந்தது

காசா எல்லைகளை, மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் திறந்தது

312
0
SHARE
Ad

டெல் அவிவ் : கடந்த ஆண்டு, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேலுக்கும் வடக்கு காசாவிற்கும் இடையிலான எல்லைகளை மீண்டும் திறக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,

முற்றுகையிடப்பட்ட காசாவுக்குள் மேலும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் வகையில் எல்லைகள் திறக்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார். காசாவிற்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்கு இஸ்ரேலிய அஷ்டோட் துறைமுகத்தைப் பயன்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மீண்டும் எல்லைத் திறப்பு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இதுவரை காசாவின் தெற்கு எல்லையில் குறுக்குவழிகள் மூலம் அனுமதிக்கப்பட்ட மனிதாபிமான உதவி விநியோகங்களின் அளவு, அந்த வட்டாரத்தில் உள்ள மனித துன்பங்களின் அளவோடு ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை.

#TamilSchoolmychoice

மீண்டும் எல்லைகள் திறக்கப்படும் என்ற செய்தியை ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளது.

காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் ஏற்படுத்தி மரணங்கள் விளைவித்ததால் எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹூவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்தே எல்லைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.