Home நாடு தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கு.நாராயணசாமி காலமானார்!

தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கு.நாராயணசாமி காலமானார்!

455
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், தமிழ்க்காப்பகத்தின் மேனாள் தலைவருமான கு.நாராயணசாமி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலமானார்.

கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நாராயணசாமி தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கற்றல், கற்பித்தல் துறையிலும் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். கலைச் சொல்லாக்கம் துறையிலும் அவர் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.