Home நாடு முஹிடின் பெர்சாத்து – பெரிக்காத்தான் – தலைவராக பதவி விலகலா?

முஹிடின் பெர்சாத்து – பெரிக்காத்தான் – தலைவராக பதவி விலகலா?

308
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தோல்விகண்டதைத் தொடர்ந்து பெர்சாத்து தலைவராகவும்,  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவராகவும் பதவி வகிக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அந்தப் பதவிகளில் இருந்து விலகுகிறார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் – குறிப்பாக நாட்டில் ஓர் அரசியல் கூட்டணிக்குத் தலைமையேற்கும் அவரின் மருமகன் நாடு திரும்பி ஊழல் குற்றச்சாட்டுகளை துணிச்சலுடன் எதிர்நோக்காமல் இருப்பது – முஹிடினின் தலைமைத்துவத்திற்கான பின்னடைவுகளில் ஒன்று என சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியர் கட்சி ஒன்றை கோலகுபுபாரு இடைத் தேர்தலுக்கு முன்பாக திடீரென பெரிக்காத்தான் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதும் இந்த இடைத் தேர்தலில் இந்தியர்களிடையே எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

#TamilSchoolmychoice

எனினும் பெர்சாத்து கட்சியின் தலைமைத்துவம் முஹிடினின் பதவி விலகலைக் கோரவில்லை என கட்சியின் துணைத் தலைவர் பைசால் அசுமு தெரிவித்தார்.

அவரைப் போன்ற வலிமை வாய்ந்த தலைவர் ஒருவர் பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தேவை என்றும் அசுமு மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சராக சைட் இப்ராகிம், முஹிடின், பாஸ் தலைவர் ஹாடி அவாங் இருவரும் தங்களின் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தார்.