Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ‘வெட்டிங் கலாட்டா’ – உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவைத் தொடர்

ஆஸ்ட்ரோ ‘வெட்டிங் கலாட்டா’ – உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவைத் தொடர்

268
0
SHARE
Ad

மே 20 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் கண்டு வரும் ‘வெட்டிங் கலாட்டா’ எனும் உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவைத் தொடருக்கு பரவலான வரவேற்பு

மே 20 இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு கண்டு வருகிறது புதுமுக உள்ளூர் இயக்குநர் சரண் சட் இயக்கிய வெட்டிங் கலாட்டா எனும் உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவைத் தொடர். இந்தத் தொடர் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை பரவலாக ஈர்த்து வருகிறது.

இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடரில் ஒரே தேதி மற்றும் இடத்தில் தங்கள் சபதங்களைப் பரிமாறிக்கொள்வதோடு, திருமணப் பந்தத்தில் இணையத் தயாராகும் மூன்று ஜோடிகளின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது. கல்லூரி வாழ்க்கையிலிருந்துத் தொழிலில் காலடி எடுத்து வைத்து அதைத் தழுவ முயற்சிக்கும் வேளையில் ஹீராவின் குடும்பத்தின் அழுத்தத்தின் காரணமாக நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் திருமணத் திட்டங்களைத் தொடங்க அஸ்வினும் ஹீராவும் முடிவுச் செய்கிறார்கள்.

இதற்கிடையில், பல முயற்சிகளுக்கு மத்தியில் இருவருக்கும் இடையில் காதலை உணராவிட்டாலும் ஜீவாவும் பிரியாவும் அதைப் பொருட்படுத்தாமல் நிச்சயிக்கப்பட்டத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள். மறுபக்கம், தனது முன்னாள் மனைவி தன் வாழ்வில் முன்னேறியதை அறிந்தவுடன் விவாகரத்து பெற்ற பிரகாஷ் மேக்னாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த ஜோடிகள் திருமணம் செய்து அவர்களின் உண்மையானக் காதலைக் கண்டுபிடிப்பார்களா அல்லது விதி வேறுத் திட்டங்களை அவர்களுக்கு வைத்திருக்கிறதா என்பதே இச்சுவாரசியமானக் காதல் நகைச்சுவைத் தொடரின் கதைக்களம். அதனை அறிய, ஜேம்ஸ் தேவன், தாஷா, ஆல்வின் மார்ட்டின், விக்கி ராவ், பவித்ரா ரெட்டி, லிஷாலினி, கஜேந்திரன், தேவகன்னி மற்றும் பலர் உட்படப் புகழ்பெற்ற உள்ளூர் நடிகர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் அற்புதமான வெட்டிங் கலாட்டா தொடரைக் காணுங்கள்.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும் வெட்டிங் கலாட்டா தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.