கோலாலம்பூர், ஏப்ரல் 27 – தேசிய முன்னணியுடன் செய்த ஒப்பந்தம் காரணமாக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஹிண்ட்ராப் இயக்கத்தை தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவரான பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
இம்முடிவு கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப்பின் உச்ச மன்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய முன்னணியை ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று கூறிய உதயக்குமார், வேதமூர்த்தி ஹிண்ட்ராப் இயக்கத்தை அதன் கொள்கைகளுக்கு விரோதமாக தவறான பாதையில் கொண்டு சேர்த்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், தேசிய முன்னணியுடனான, ஹிண்ட்ராப்பின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹிண்ட்ராப் மக்கள் கூட்டணியை ஆதரிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ மக்கள் கூட்டணியை ஆதரிப்பதா? இல்லையா? என்பதை வாக்காளர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம் என்று உதயக்குமார் பதிலளித்துள்ளார்.