Home நாடு செகாமாட்-லாபிஸ் தொகுதிகளில் அம்பிகா இன்று பிரச்சாரம் – இந்திய வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக மாறும்!

செகாமாட்-லாபிஸ் தொகுதிகளில் அம்பிகா இன்று பிரச்சாரம் – இந்திய வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக மாறும்!

676
0
SHARE
Ad

Ambiga-Sliderஏப்ரல் 29 கடுமையான போட்டி உருவாகி இருக்கும் செகாமாட் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டத்தோ சுவா ஜூய் மெங்கிற்கு ஆதரவாக களத்தில் இறங்கும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் இன்றுஜோகூரிலுள்ள செகாமாட், லாபிஸ் நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்.

#TamilSchoolmychoice

அம்பிகாவின் உரையைக் கேட்க, செகாமாட், லாபிஸ் தொகுதிகளில் உள்ள இந்திய வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் அம்பிகாவின் இந்த பிரச்சாரத்தால், இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள நடுநிலை இந்திய வாக்காளர்கள் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தான் பிரச்சாரம் செய்யும் இடங்களிலெல்லாம் எல்லா இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை அம்பிகா ஈர்த்து வருகின்றார்.

லாபிஸ் தொகுதியில் ஜசெகவின் சார்பில் போட்டியிடும் முன்னாள் செனட்டரான ராமகிருஷ்ணனை ஆதரித்து அம்பிகா பிரச்சாரம் செய்யவிருக்கின்றார்.

செகாமாட், பத்து அன்னாம், தாமான் ஸ்ரீ ஆலாம் 2இல் இரவு 8.00 மணிக்கும், சாஆ தொழிற் பேட்டையில் இரவு 10.00 மணிக்கும் அம்பிகா உரையாற்றவிருக்கின்றார்.

அவரோடு இணைந்து மக்கள் கூட்டணியின் மற்ற தலைவர்களும் இந்த கூட்டங்களில் உரையாற்றவிருக்கின்றனர்.

இந்த கூட்டங்கள் குறித்து மேல்விவரங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்:

மூர்த்தி – 019-7627117

நாகராஜூ – 012 – 7271700