Home நாடு மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்கிய வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு

மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்கிய வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு

472
0
SHARE
Ad

waythaஜாசின், ஏப்ரல் 29- ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவின் தலைவர் வேதமூர்த்தியின் கொடும்பாவியை அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜாசின் வட்டாரத்திலுள்ள மக்கள் எரித்துள்ளனர்.

இது போன்று தங்களுக்கு ஒவ்வாத தலைவர்களைக் கண்டிக்கும் வகையில் அவர்களின்  கொடும்பாவியை எரிப்பது என்பது தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழ்த்தப்படும் ஓர் அரசியல் கண்டன நடைமுறையாகும்.

தற்போது  வேதமூர்த்தி குழுவினருக்கு எதிராக நாடெங்கிலும் பெருகி வரும் கண்டனக் குரல்கள், எதிர்ப்புகளின் மற்றொரு வடிவமாக இந்த கொடும்பாவி எரிப்பு நடந்தேறியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியர்களின் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய ஹிண்ட்ராப் தற்போது மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்கி இருப்பதாக ஜாசின் வட்டார மக்கள் தெரிவித்தனர்.

ஹிண்ட்ராப் போராட்டத்தின் போது பலர் பலவிதமான தொல்லைகளை எதிர்நோக்கினர். போராட்டம் நடத்தினர். ஆனால் தற்போது வேதமூர்த்தி அத்தனை போராட்டங்களுக்கான அர்த்தத்தையும் ஒரேயடியாக வீணடித்து விட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

5 ஆண்டு காலம் லண்டனில்  இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் இங்கு வந்த வேதமூர்த்தி திடீரென்று உண்ணாவிரத நாடகம் நடத்தி தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாக ஜாசின் மக்கள் தெரிவித்தனர்.

நாடு திரும்பியவுடன் பிரதமரைச் சந்திக்காமல் இருந்த வேதமூர்த்தி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் இப்போது பொதுத் தேர்தல் நேரத்தில் திடீரென்று தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது மட்டும் ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது என்றும் ஜாசின் வட்டாரத்தில் இந்த கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன.