Home 13வது பொதுத் தேர்தல் அன்வாரை பிரதமராக ஆதரிக்கும் இஸ்லாமியத் தலைவரின் கடிதத்தை வெளியிட்டார் நிக் அஸிஸ்

அன்வாரை பிரதமராக ஆதரிக்கும் இஸ்லாமியத் தலைவரின் கடிதத்தை வெளியிட்டார் நிக் அஸிஸ்

645
0
SHARE
Ad

Nik Abdul Aziz Nik Matகோலாலம்பூர், ஏப்ரல் 29- உலகம் முழுவதுள்ள சன்னி முஸ்லிம்களின் ஆன்மிகத் தலைவராகக் கருதப்படும் சவுதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய அறிஞர் யூசோப் கொரடாவி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை மலேசிய பிரதமராக அங்கீகரிக்கும்  கடிதத்தை  வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தை அண்மையில் லெம்பா பந்தாய் தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக வருகை தந்த பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் நிக் அஸிஸ் வெளியிட்டார். இக்கடித வெளியீட்டின் போது அன்வாரின் புதல்வி நூருல் இசாவும் உடன் இருந்தார்.

இக்கடிதத்தின் வழி அன்வாரின் மதிப்பு முஸ்லீம் வாக்காளர்களிடையே பன்மடங்கு பெருகும் என்பதோடு, லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடும்  நூருல் இசாவின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமடைந்துள்ளதாக கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மார்ச் 2ஆம் தேதியிட்ட இந்த கடிதம் மலேசிய மக்களுக்காக எழுதப்பட்ட கடிதம். இதனை எழுதியுள்ள யூசுப் கொரடாவி அகில உலக இஸ்லாமிய அறிஞர்களின் அமைப்பு தலைவராவார்.

அந்த கடிதத்தில், தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த வரையில் அன்வார் மலேசிய அரசாங்கத்தை பிரதமர் பதவியில் இருந்து தலைமை தாங்கி வழி நடத்த பொருத்தமானவர் எனவும், அவரின் கடந்த கால சரித்திரம், அனுபவம், அறிவாற்றல், போராட்டகுணம், விடாமுயற்சி ஆகியவற்றை அவரின் இளமை காலத்தில் இருந்து நான் அறிவேன் என்றும் கொரடாவி கூறியுள்ளார்.

அதே கடிதத்தில் அந்த இஸ்லாமிய அறிஞர் பிரித்தாளும் அரசியல் நடைமுறைகளை மக்கள் ஒதுக்க வேண்டும் என்றும், அன்வாரை ஒதுக்கி வைக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அனைவரும் அன்வாரை அன்புடன் ஆதரிக்கின்றனர் என்றும் அதனால் அன்வார் பிரதமர் பதவியை ஏற்க பொருத்தமானவர்தான் என்றும் அந்த இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.   இந்த புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரிடம் நெருக்கமான நட்பு அன்வாருக்கு உண்டு என்பதை இக்கடிதத்தின் வழி அறிய முடிகிறது.

இக்கடிதத்தின் மூலம் அன்வாருக்கு முஸ்லிம் வாக்காளர்களிடையே மதிப்பு இப்பொதுத்தேர்தலில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடிதத்தை வெளியிட்டு பேசிய நிக் அஸிஸ் இஸ்லாமிய போதனைகளை அமல்படுத்தும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்குமாறு  கூடியிருந்த லெம்பா பந்தாய் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

.

 

.