Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ஆட்டம்: மில்லினியம் ஆர்ட்ஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது!

ஆஸ்ட்ரோ : ஆட்டம்: மில்லினியம் ஆர்ட்ஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது!

86
0
SHARE
Ad

• ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான ஆட்டத்தில் ‘நேற்று நோ நோ’ என்றப் பாடலுக்குக் குறிப்பிடத்தக்க நடனப் படைப்பை வழங்கி மில்லினியம் ஆர்ட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

• ஜனவரி 4 மற்றும் 5, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ‘பிரபு தேவா சுற்று’ என்றக் கருப்பொருளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்புக் கண்டன.

• உள்ளூர் நடன இயக்குனரும் இயக்குனருமான இந்திரன் இந்த அத்தியாயங்களில் விருந்தினர் நடுவராக இடம்பெற்றார். நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே. நாடா; தொகுப்பாளர், நடனக் கலைஞர், உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டும்மல்லாது ஆட்டம் 100 வகையின் தொகுப்பாளருமான, அருணா; மற்றும் சிங்கப்பூரின் நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் மற்றும் ஆட்டம் 100 வகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வரா ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இருந்தனர்.

#TamilSchoolmychoice

• சிறந்த 8 அணிகளின் விபரங்கள் பின்வருமாறு:

• ஆட்டம் வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கும் அற்புதமான ரொக்கப் பரிசுகள் பின்வருமாறு:

o முதலாம் பரிசு: ரிம50,000.00

o இரண்டாம் பரிசு: ரிம25,000.00

o முன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம5,000.00; மற்றும்

o ஐந்தாம் மற்றும் ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம2,000.00

• ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

• மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.