Home கலை உலகம் பவர்ஸ்டார் கைது செய்யப்பட்டதால், படப்பிடிப்புகள் தாமதம்!

பவர்ஸ்டார் கைது செய்யப்பட்டதால், படப்பிடிப்புகள் தாமதம்!

533
0
SHARE
Ad

power-star-srinivasan_350_042613010004சென்னை, ஏப்ரல் 29 – கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப் பிறகு டாக்டர் சீனிவாசன் என்கிற பவர்ஸ்டாரின் மார்க்கெட் சூடுபிடித்து விட்டது.

குத்தாட்டம், காமெடி என தற்போது 6 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். அதோடு, பவர்ஸ்டாரை வைத்துப் படம் எடுக்க மேலும் பல பட நிறுவனங்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 கோடி மோசடி வழக்கில் பவர் ஸ்டாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் அவரை வைத்து படம் பண்ணி வந்த அனைத்து படாதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதில் சிலர் அவர் வெளியே வந்த பிறகு படப்பிடிப்பை தொடருவதா? இல்லை அவருக்கு பதிலாக வேறு காமெடியன்களை புக் பண்ணி படப்பிடிப்பை தொடரலாமா என்று யோசித்து வருகின்றனர்.

ஆனால், இதை கேள்விப்பட்ட பவர்ஸ்டார் தரப்பினர், அவசரப்பட வேண்டாம். அவர் கூடிய சீக்கிரமே வெளியே வந்துவிடுவார். கொஞ்சம் டயம் கொடுங்கள் என்று சமாதானம் செய்து, வேறு நடிகர்களை வைத்து படம் பண்ணிவிடாத வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.