Home அரசியல் வேதமூர்த்தியின் பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பே – ஹாஜி தஸ்லீம் சாடல்

வேதமூர்த்தியின் பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பே – ஹாஜி தஸ்லீம் சாடல்

755
0
SHARE
Ad

Taslim-Hajiகோலாலம்பூர், ஏப்ரல் 30 –  தேசிய முன்னணியுடன் ஹிண்ட்ராப் வேதமூர்த்தி செய்து கொண்ட பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பு மட்டுமே என்று நியாட் தலைவர் டத்தோ ஹாஜி தஸ்லீம் சாடியுள்ளார்.

சமுதாயப் பிரச்சனைகளிலும், இந்தியர் சார்ந்த பிரச்சனைகளிலும் தயங்காது குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரான ஹாஜி தஸ்லீம், நியாட் என்ற அமைப்பின் மூலம் சமுதாயத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகின்றார்.

“இந்திய சமுதாயத்தை உயர்ந்த வேண்டும் என்ற நோக்கில் 1974ஆம் ஆண்டு அன்றைய அமைச்சர் டத்தோ கு.பத்மநாபன் புளு பிரிண்ட் என்ற நீலப்புத்தகத் திட்டம் ஒன்றை தயார் செய்திருந்தார். இந்தத் திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இந்திய சமுதாயத்தின்  மேம்பாட்டிற்காக வேதமூர்த்தி தயாரித்துள்ள இந்த பெருந்திட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொண்டது வெறும் நாடகமே” என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தில் 17 விழுக்காடு இருந்த நம்மவர்களின்  வேலை வாய்ப்பு தற்போது 2.5 விழுக்காடாக இறங்கி விட்டது. அதனால் இந்தியர்கள் பொருளாதாரத்தில் உயர இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்.

மேலும் கடந்தாண்டு அமைச்சரைவைக் கூட்டத்தில்  இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என்று கூறியதே இன்னும் நடைமுறைப்படுத்த இயலாத வேளையில், அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படாத வேதமூர்த்தியின் பெரும் திட்டம் மட்டும் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்றும் ஹாஜி தஸ்லீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுல்கிப்ளி நோர்டின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அவர் மீண்டும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் ஹாஜி தஸ்லீம் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.