Home கலை உலகம் சந்தானம் வேண்டவே வேண்டாம்! உறுதியாக சொன்ன கார்த்தி!

சந்தானம் வேண்டவே வேண்டாம்! உறுதியாக சொன்ன கார்த்தி!

548
0
SHARE
Ad

indexசென்னை, மே 3- கார்த்தி நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உள்பட சில படங்களில் அவருடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். ஆனால் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று  சொல்கிறாராம் கார்த்தி.

அதேபோல், சிங்கம்-2 படத்தில் விவேக் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் டைரக்டர் ஹரி. இதையடுத்து, தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி. ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது காமெடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்துள்ளாராம் ஹரி.

ஆனால் இதுபற்றி, சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்னதான் கோபம்? என்று விசாரித்தால், அவர் மீது எந்த கோபமும் இல்லை. எப்போதும் போல் அவர்கள் நண்பர்களாகத்தான் உள்ளார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து காமெடி செய்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகவே தெரியும் என்பதால்தான், அவருடன் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார் கார்த்தி என்கிறார்கள்.