Home உலகம் சீன ராணுவம் அத்துமீறல் விவகாரம் : இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா முத்தரப்பு பேச்சு

சீன ராணுவம் அத்துமீறல் விவகாரம் : இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா முத்தரப்பு பேச்சு

535
0
SHARE
Ad

Tamil-Daily-News_32347834111வாஷிங்டன், மே 3-  இந்தியா-ஜப்பான் -அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. சீன ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், 3 நாடுகளின் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.சீன கடல் பகுதியில் உள்ள சில தீவுகள் தனக்கு சொந்தமானவை என்று கூறி வருகிறது. அத்துடன் கப்பல் படைகளையும் அந்த பகுதிகளுக்கு அனுப்பி உள்ளது. இதனால் சீனா  ஜப்பான் இடையே பதற்றம் நிலவுகிறது. மேலும், தென் கொரியா மீது வடகொரியா போர் தொடுப்போம் என்று மிரட்டி வருகிறது.

வடகொரியாவின் நட்பு நாடான சீனாதான் இதை தடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் 2 வாரத்துக்கு முன்பு ஊடுருவினர். ஆனால், இந்திய எல்லை பகுதியில் படைகள் ஊடுருவவில்லை என்று சீனா கூறுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இந்த பிரச்னை குறித்து பேச வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வரும் 9ம் தேதி சீனா செல்கிறார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், இந்தியா  ஜப்பான்  அமெரிக்க நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. சீன ராணுவத்தின் அத்துமீறல், பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் மட்டுமன்றி, இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளில் வர்த்தக மேம்பாடு, கடலோர பாதுகாப்பு குறித்து 3 நாட்டு பிரதிநிதிகளும் தீவிர ஆலோசனை நடத்தினர். அடுத்த கூட்டத்தை டோக்கியோவில் நடத்த 3 நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.