இலங்கை, மே 4- ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தவணைக்கான ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கவும், பிரதம நீதியரசர் ஒருவரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் இந்த மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும், மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பிலும் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் சில புதிய திருத்தங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்த்துள்ளது.
இதற்கான வரைவுத் திட்ட யோசனைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் சில சரத்துக்களில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.